தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மனிதநேய திருநாளாக கொண்டாட்டம்


தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மனிதநேய திருநாளாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2022 9:44 AM GMT (Updated: 28 Feb 2022 9:44 AM GMT)

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச்-1) மனிதநேய திருநாளாக கொண்டாடுகிறோம். இதையொட்டி கருத்தரங்கம், நகைச்சுவை அரங்கம், இசையரங்கம், சொற்போர் அரங்கம் என அறிவுசார் நிகழ்ச்சிகளும், மருத்துவம், ரத்த தான முகாம்கள், மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, கருணை இல்லத்தில் நலத்திட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்போருக்கு நலத்திட்டம், உலக மகளிர் தின விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்குதல் என 27-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை முதற்கட்டமாக 35 நிகழ்ச்சிகளை சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், திருச்சி சிவா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, சொற்பொழிவாளர் சுகிசிவம், டாக்டர் சுதா சேஷய்யன், நடிகை மீனா, பேராசிரியர் சாலமன் பாப்பையா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story