நிலக்கடலையில் சுருள் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


நிலக்கடலையில் சுருள் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 1 March 2022 6:45 PM GMT (Updated: 1 March 2022 11:18 AM GMT)

நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீடாமங்கலம்,

நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஆய்வு செய்யும்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நிலக்கடலை சுருள் பூச்சி தென்படுகிறது. இந்த பூச்சிகள் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உயிர்வாழ்ந்து 2 அல்லது 3 இலைகளை ஒன்றாக பிணைத்து அதனுள் இருந்து கொண்டே இலைகளை சுரண்டி சேதத்தை விளைவிக்கும். 
பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து தீயினால் எரிக்கப்பட்டது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.

ஒரு எக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது 3 சதவீத வேப்ப எண்ணெய் பயன்படுத்த வேண்டும். 
ஒரு எக்டேருக்கு செயற்கை பூச்சிக்கொல்லிகளான குளோர்பைரிபாஸ், மாலத்தியான் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவுகளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story