சித்தமல்லியில் வேளாண் செயல் விளக்க நிகழ்ச்சி


சித்தமல்லியில் வேளாண் செயல் விளக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 March 2022 6:45 PM GMT (Updated: 6 March 2022 10:17 AM GMT)

சித்தமல்லியில் வேளாண் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

நீடாமங்கலம்:-

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்றும் இணை பேராசிரியர் ஆனந்தராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நீடாமங்கலம் அருகே சித்தமல்லியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முட்டை மற்றும் உப்பை பயன்படுத்தி நெற்பதர்களை நீக்கும் முறை மற்றும் பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறைகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் பஞ்சகாவ்யா பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். 

Next Story