கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் திடீர் தீ


கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் திடீர் தீ
x
தினத்தந்தி 11 March 2022 4:15 PM GMT (Updated: 11 March 2022 4:15 PM GMT)

கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சேந்தமங்கலம்:
திடீர் தீ
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைக்கு செல்ல அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். தற்போது கோடைக்காலம் தொடங்கியதால், கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து அதன் இலைகள் ரோட்டின் இருபுறங்களிலும் கொட்டி கிடக்கின்றன. 
இந்தநிலையில் கொல்லிமலைக்கு செல்லும் 2 மற்றும் 9-வது கொண்டை ஊசி வளைவுகளில் மாலை இலைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
அதன்பேரில் கொல்லிமலை அடிவாரத்தில் இருந்த வனக்காப்பாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நாமக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 
கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றுலா பயணிகளால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மரங்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story