பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம் வாங்கியதாக புகார்: கோலார் கூடுதல் கலெக்டரிடம் ஊழல் தடுப்பு படை விசாரணை


பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம் வாங்கியதாக புகார்: கோலார் கூடுதல் கலெக்டரிடம் ஊழல் தடுப்பு படை விசாரணை
x
தினத்தந்தி 11 March 2022 4:17 PM GMT (Updated: 11 March 2022 4:17 PM GMT)

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கோலார் கூடுதல் கலெக்டரிடம் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவர் கைதாக இருப்பதாக தெரிகிறது.

கோலார் தங்கவயல்:
  
லஞ்சம்

  கோலார் மாவட்ட கூடுதல் கலெக்டராக இருப்பவர் சினேகா. இந்த நிலையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஒருவர், விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது, கூடுதல் கலெக்டர் சினேகா அவரிடம் ரூ.2.90 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பம் இல்லாத அந்த நபர், இதுகுறித்து கோலார் மாவட்ட ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தார்.

  இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் அந்த நபருக்கு சில அறிவுரைகள் கூறினர். பின்னர் அவர், கூடுதல் கலெக்டர் சினேகாவை தொடர்பு கொண்டு லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்தார்.

கூடுதல் கலெக்டரிடம் விசாரணை

  அதன்படி நேற்று அந்த நபர் ரூ.2.90 லட்சத்தை கொண்டு கூடுதல் கலெக்டர் அலுவலகத்துக்கு ெசன்றார். அப்போது அரசு ஊழியர்கள் பிரபாகர், நஞ்சேகவுடா ஆகியோர் அந்த நபரிடம் பணத்தை வாங்கினார்கள். அந்த சமயத்தில் அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

  இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் கலெக்டர் சினேகாைவ பிடித்து ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அவரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது.

Next Story