குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 March 2022 4:23 PM GMT (Updated: 11 March 2022 4:23 PM GMT)

குடிநீர் கேட்டு ஒன்றிய வத்தலக்குண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்

வத்தலக்குண்டு;
வத்தலக்குண்டு அருகே நடகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வத்தல்பட்டியில் கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்டவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

 இதனால் சீராக குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வத்தல்பட்டி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணைச்செயலாளர் முத்து ரத்தினவேல், ஒன்றிய செயலாளர் செண்பக பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது கிராம மக்கள் குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

 அதன்பிறகு தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் கிராம மக்கள் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஓரிரு நாட்களில் குடிநீர் சீராக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story