ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோய் ரத்த உறைவு நீக்க பயிலரங்கம்


ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோய் ரத்த உறைவு நீக்க பயிலரங்கம்
x
தினத்தந்தி 17 March 2022 9:56 AM GMT (Updated: 17 March 2022 9:56 AM GMT)

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோய் ரத்த உறைவு நீக்கம் குறித்த பயிலரங்கம் நேற்று நடைபெற்றது.


தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மக்கள் தொகையில் சுமார் 130 பேருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படுகிறது. 80 சதவீத பக்கவாத நோயின் முக்கிய காரணி மூளையில் ரத்த உறைவு ஆகும். ரத்த உறைவு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டால், ரத்த உறைவு நீக்க மருந்து செலுத்தி பக்கவாத முடக்கு பாதிப்பு இல்லாமல் நோயாளியை இயல்பு நிலைக்கு மீட்க முடியும்.

ஆனால், 95 சதவீதம் நோயாளிகள் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். பாக்கவாத நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க வேண்டும். பக்கவாத நோயை சரி செய்வதற்கான மூளை ரத்த உறைவு நீக்க அக நாள் சிகிச்சையை அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கான பயிலரங்கம் 9 மருத்துவக்கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளார் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story