தார் ரோட்டை சீரமைக்க வேண்டும்


தார் ரோட்டை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2022 10:22 AM GMT (Updated: 23 March 2022 10:22 AM GMT)

தார் ரோட்டை சீரமைக்க வேண்டும்

குன்னத்தூர் அருகே காவுதம்பாளையம் ஊராட்சி கிழக்கு தச்சம் பாளையம் முதல் தொட்டிபாளையம் வரை சுமார் 1½  கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு போடப்பட்டது.  அந்த ரோட்டில் ஜல்லி கற்கள் எடுக்க அடிக்கடி லாரி சென்று வந்ததால் அந்த ரோடு குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்போது அந்த ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கூட செல்ல மிகவும் கஷ்டப் பட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ரோடு குண்டும் குழியுமாக பெயர்ந்து, ஜல்லிக்கற்களும் பெயர்ந்து சில இடங்களில் ஒரு அடி ஆழ குழி விழுந்துள்ளது. மழை காலங்களில் அந்தக்குழி தெரியாததால் தண்ணீர் நிரம்பி இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே  ரோட்டை உடனடியாக புதுப்பித்து கொடுக்கவேண்டி இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story