மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் வானிலை குறித்த விவரங்களை அறிய கண்காட்சி


மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் வானிலை குறித்த விவரங்களை அறிய கண்காட்சி
x
தினத்தந்தி 24 March 2022 10:04 AM GMT (Updated: 24 March 2022 10:04 AM GMT)

மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் வானிலை குறித்த விவரங்களை அறிய கண்காட்சியை மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தொடங்கி வைத்தார்.

கடந்த 1950-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி ஜெனிவாவில் இந்தியா உள்பட 193 நாடுகள் இணைந்து உலக வானிலையியல் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டுந்தோறும் மார்ச் 23-ந்தேதி உலக வானிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மீனம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வானிலை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் கண்காட்சியை மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தொடங்கி வைத்தார்.

பின்னர் ஜி.பி.எஸ். கருவியுடன் பறக்க விடப்பட்ட பலூனில் இருந்து பெறப்படும் தகவல்களை கொண்டு காற்றில் உள்ள ஈரப்பதம், வெயில் அளவு, மழை ஆகியவை எவ்வாறு கணக்கிடப்பட்டு, வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்படுகிறது என்பது செயல்முறை விளக்கத்துடன் மாணவ-மாணவிகளுக்கு நிபுணர்கள் விளக்கி காண்பித்தனர்.


Next Story