ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்தில் கருங்கல்படி, மதில் சுவர் அமைக்கும் பணி தொடக்கம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்தில் கருங்கல்படி, மதில் சுவர் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 30 March 2022 4:18 PM GMT (Updated: 30 March 2022 4:18 PM GMT)

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்தில் கருங்கல்படி, மதில் சுவர் அமைக்கும் பணி தொடக்கம்

ராசிபுரம்:
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்றதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு கருங்கல் படிகள், மதில் சுவர், நீராழி மண்டபம் ஆகிய அனைத்து திருப்பணியும் கருங்கல்லில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான திருப்பணி நேற்று சிவனடியார்கள் திருமுறை பாடி திருப்பணியை சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தனர். ராசிபுரம் தெப்பக்குளம் திருப்பணி அறக்கட்டளை சார்பில் இந்த பணி நடந்து வருகிறது. திருமுறை பாடல்களைப் பாடி வேள்விகள் செய்து பணி தொடங்கப்பட்டது. தெப்பக்குளம் திருப்பணி அறக்கட்டளை சார்பில் திருப்பணியை குருமார்கள் ஒளியரசு தலைமையில் கோவை குமரலிங்கம், ஈரோடு வெங்கடேசன் ஆகியோர் செய்தனர். இதில் திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள், சிவனடியார்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story