கோலியனூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்


கோலியனூர் அரசு பள்ளியில்  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 30 March 2022 4:23 PM GMT (Updated: 30 March 2022 4:23 PM GMT)

கோலியனூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

வளவனூர்

ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி குழந்தை நல மருத்துவர் காமேஷ், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் தேவேந்திரன், கண் மருத்துவர் அனுராதா, முடநீக்கியல் மருத்துவர் சதீஷ்குமார், மனநல மருத்துவர் புனிதவதி மற்றும் டெக்னீசியன்கள் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கி உரிய ஆலோசனைகளை வழங்கினா். 

முகாமில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனவேல் ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி கன்னியப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் உமாராணி, தேன்மொழி, உதவி தலைமையாசிரியர் அருமுத்துவள்ளியப்பா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, சிறப்பு பயிற்றுனர்கள் தேவிசித்ரா, சுகுணா, கஜலட்சுமி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்திரசேகர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார். முடிவில் கோலியனூர் ஆசிரியர் பயிற்றுனர் பத்மாவதி நன்றி கூறினார்.

Next Story