சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.7¾ லட்சம் காணிக்கை வசூலானது


சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.7¾ லட்சம் காணிக்கை வசூலானது
x
தினத்தந்தி 30 March 2022 4:26 PM GMT (Updated: 30 March 2022 4:26 PM GMT)

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில ரூ.7¾ லட்சம் காணிக்கை வசூலானது.


கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியல்கள் நேற்று,  இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் சிவாகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில்,  7 லட்சத்து 94 ஆயிரத்து 149 ரூபாய் மற்றும் 68 கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது.  காணிக்கையை எண்ணும் பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

அப்போது செயல் அலுவலர் கார்த்திகேயன், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவில் பூசாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story