திருவெண்ணெய்நல்லூரில் வருகிற ஜூன் மாதம் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு

திருவெண்ணெய்நல்லூரில் வருகிற ஜூன் மாதம் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்  பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 30 March 2022 4:26 PM GMT (Updated: 30 March 2022 4:26 PM GMT)

திருவெண்ணெய்நல்லூரில் வருகிற ஜூன் மாதம் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவிலில் பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமையில் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், குருக்கள் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை வருகிற ஜூன் 6-ந் தேதி காலை 8.30 மணிக்குமேல் 10 மணிக்குள் நடத்துவது எனவும், விழா ஏற்பாடுகளை அனைவரும் ஒற்றுமையாக இருந்து செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள், உற்சவ தாரர்கள், உபயதாரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இதற்கு முன்பு இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 27.8.2004 அன்று நடைபெற்றது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கோவில் கும்பாபிஷேகத்துக்கான வேலைப்பாடுகள் நடைபெற்றது. புதியதாக ராஜகோபுரம், கல்யாண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குழு அமைத்து கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Next Story