கள்ளக்குறிச்சியில் நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக வணிக வளாகம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்


கள்ளக்குறிச்சியில் நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக வணிக வளாகம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 March 2022 4:29 PM GMT (Updated: 30 March 2022 4:29 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் விமலாமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி எதிரில் சிறுவங்கூர் ஊராட்சியில் ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் சமத்துவபுரம் கட்டியது போக, மீதம் உள்ள காலி இடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வணிக வளாக கடைகள் கட்டப்படும்.

 கிராம ஊராட்சிகளுக்கு திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி அளித்திட ரூ.50 லட்சம் மதிப்பில் மாவட்ட அளவிலான வள மையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டுவது, மேலும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நியமனக்குழு, 

வேளாண் உற்பத்தி, கல்வி, பொது நோக்கங்கள் ஆகிய குழுக்களுக்கு தலைவராக ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகமும்,  செயல் உறுப்பினராக வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் உறுப்பினர்களாக ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலாமுருகன் உள்பட கவுன்சிலர்களை நியமனம் செய்வது என்பது போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் மேலாளர் ஆறுமுகம், கவுன்சிலர்கள்,  அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story