எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும்


எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 March 2022 4:23 PM GMT (Updated: 31 March 2022 4:23 PM GMT)

அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தினா்.

விழுப்புரம், 

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இதற்கு சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் அனைவரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாஸ், ரங்கநாதன், நாராயணன், சுப்பிரமணி, பெருமாள், பன்னீர்செல்வம், மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கரும்பு பருவத்திற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும், ஆலைகளிடமிருந்து மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு உரிய தொகையை உடனுக்குடன் விடுவிக்க வழிவகை செய்ய வேண்டுமென முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை குழுமத்தின் தலைவர் சத்தியமூர்த்தி, கரும்பு வெட்டி முடித்து 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகையை வழங்குவதாக உறுதியளித்த நிலையில் தற்போது 70 நாட்களுக்கு மேலாகியும் பணம் பட்டுவாடா செய்யப்படாததை வன்மையாக கண்டிப்பது, கரும்பு கிரையத்தொகையை விரைவாக பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story