உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் விழா


உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் விழா
x
தினத்தந்தி 12 April 2022 4:06 PM GMT (Updated: 12 April 2022 4:06 PM GMT)

உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் விழா

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா  கடந்த 5ந் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன்  தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று  இரவு கம்பம் நடுதல் விழா நடந்தது. இதற்காக உடுமலை சுந்தர விநாயகர் கோவில் வளாக கிணற்றில் வைக்கப்பட்டிருந்த கம்பம் வெளியே எடுக்கப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அங்கிருந்து மேளதாளம், நாதசுர வாத்தியத்துடன் கம்பம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சன்னதியை சுற்றி வலம் வந்து கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. பின்னர் பூவோடு, மாரியம்மன் சன்னதியைசுற்றி 3முறை வலம் வந்து கம்பத்தில் வைத்து எடுக்கப்பட்டது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பால், சந்தனம் கலந்த தண்ணீர் உள்ளிட்ட தீர்த்தங்களை கம்பத்தில் ஊற்றி வழிபட்டனர்.

Next Story