ஆர்.கே.எஸ்.கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம்


ஆர்.கே.எஸ்.கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம்
x
தினத்தந்தி 12 April 2022 4:17 PM GMT (Updated: 12 April 2022 4:17 PM GMT)

இந்திலி ஆர்.கே.எஸ்.கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறையின் சீனுவாச ராமானுஜர் மன்றம் சார்பில் வேலை வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணிதத்துறை தலைவர் நர்கீஸ்பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினார். ஈரோடு புள்ளியியல் ஆய்வாளர் கோவிந்தராஜு கலந்து கொண்டு மாணவர்களுக்கு கணிதத்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்தும், புள்ளியியல் துறையின் விரிவான செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறி பயிற்சி அளித்தார். திருவண்ணாமலை புள்ளியியல் ஆய்வாளர்  வெங்கடேசன் புள்ளியியல் துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறித்தும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளித்தார். இதில் புள்ளியியல் துறையில் பணியாற்றி வரும் முன்னாள் கல்லூரி மாணவர்கள் இளையராஜா, பாலமுருகன், ஹேமா, சாந்தி, சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அழகுவேலவன், மனோகரன், ஜனனி, பிரவீனா மற்றும் ராமானுஜர் மன்றத்தின் தன்னார்வ மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் பூங்கொடி சத்யா நன்றி கூறினார்.

Next Story