தேர்வு முறைகேடு- ராணுவ அதிகாரி, வீரர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 April 2022 4:23 PM GMT (Updated: 12 April 2022 4:23 PM GMT)

ராணுவ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக ராணுவ அதிகாரி, வீரரை சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.

புனே, 
ராணுவ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக ராணுவ அதிகாரி, வீரரை சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.
ராணுவ தேர்வில் முறைகேடு
 புனேயில் கடந்த ஆண்டு நடந்த ராணுவ தேர்வில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. ராணுவ அதிகாரி விகாஸ் ராய்சாதா, வீரர்கள் சுஷாந்த் நாகக், அலோக் குமார் மற்றும் அலோக்குமாரின் மனைவி பிரியங்கா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். விசாரணையில் ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வின் போது அதிகாரி விகாஸ் ராய்சாதா கேள்விக்கான விடைகளை ராணுவ வீரரின் மனைவிக்கு அனுப்பி, அவர் மூலமாக தேர்வர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.
 மேலும் அலோக்குமாரின் மனைவி பிரியங்கா வங்கி கணக்கில் இருந்து சுஷாந்த் நாகக்கின் வங்கி கணக்கிற்கு அதிகளவில் பணம் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
 அதிகாரி, வீரர் கைது
 இந்தநிலையில் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. ராணுவ அதிகாரி விகாஸ் ராய்சாதா, வீரர் அலோக்குமாரை கைது செய்தனர். 
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு 2 பேரையும் வருகிற 16-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியது.



Next Story