சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா:அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை


சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா:அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 17 April 2022 10:21 PM GMT (Updated: 17 April 2022 10:21 PM GMT)

தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவையொட்டி, சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி- பள்ளிபாளையம் பிரிவு ரோடு பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு நேற்று தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க் கள் சுந்தரராஜன், ராஜமுத்து, மணி, பாலசுப்பிரமணியம், சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பொன்சரஸ்வதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சி.ஆர். ரத்தினம், சங்ககிரி பேரூர் செயலாளர் செல்வம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story