வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் பஞ்சுகள் எரிந்து நாசம்


வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் பஞ்சுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 19 April 2022 4:15 PM GMT (Updated: 19 April 2022 4:15 PM GMT)

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் பஞ்சுகள் எரிந்து நாசம்

முத்தூர்:-
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம் அடைந்தது.
நூல் மில்லில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் - மூலனூர் சாலை சுப்பிரமணிய கவுண்டன் வலசு பகுதியில் ஆர்.ஜெயராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான நூல் மில் செயல்பட்டு வருகிறது.
 இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் நூல் மில்லில் உள்ளே எந்திரங்கள் உள்ள ஒரு பகுதியில் திடீரென்று தீ பிடித்தது. இந்த தீ மளமளவென்று எந்திரங்கள் பகுதி முழுவதும் வேகமாக பரவி அருகில் இருந்த பஞ்சுகளில் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள்
இதுபற்றி தகவல் அறிந்த நூல் மில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் உடனடியாக தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து தீ அணைப்பான் கருவி மற்றும் தண்ணீர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை.
 இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், போக்குவரத்து அலுவலர் பி.வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர்.
மின்கசிவு
ஆனாலும் இந்த தீ விபத்தில் நூல் உற்பத்தி எந்திரங்கள், பஞ்சுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடித்து நாசமாகின. மேலும் இந்த தீ விபத்தில் சேதமடைந்த எந்திரங்கள், பஞ்சுகள் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

Next Story