மாநில அளவிலான பாரம்பரிய உணவு கண்காட்சி


மாநில அளவிலான பாரம்பரிய உணவு கண்காட்சி
x
தினத்தந்தி 19 April 2022 4:26 PM GMT (Updated: 19 April 2022 4:26 PM GMT)

மாநில அளவிலான பாரம்பரிய உணவு கண்காட்சி

முத்தூர், 
 நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான இயற்கை ஊட்டச்சத்து பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 
 இதில் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பாரம்பரிய ஊட்டச்சத்து மிக்க ராகி, கம்பு, கேழ்வரகு, சாமை, திணை உணவு வகைகள் மற்றும் நெருப்பு, அடுப்பில்லாமல் இயற்கை முறையில் உற்பத்தியாகும் பழம், கனி வகைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க பானங்கள் உள்பட பல்வேறு உணவு வகைகளை தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் அரசு கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு சிறந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்தனர். முடிவில் சிறந்த இயற்கை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை தயார் செய்த மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு தொகை, கேடயம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் கு.கவிதா செய்திருந்தார்

Next Story