மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 22 April 2022 10:29 AM GMT (Updated: 22 April 2022 10:29 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா-2022, காஞ்சீபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பார்வைத்திறன் மற்றும் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசி, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரநாற்காலிகள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கரநாற்காலிகள் என மொத்தம் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story