மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை- காங்கிரஸ்


மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை- காங்கிரஸ்
x
தினத்தந்தி 15 May 2022 6:45 PM GMT (Updated: 15 May 2022 10:10 AM GMT)

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

வாய்மேடு:-

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்டம் தலைஞாயிறில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் வீரமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி பொதுச் செயலர் சுர்ஜித் சங்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டு, 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 107 அடியாக உள்ளது. 
மேலும் வானிலை ஆய்வாளர்களும் பருவமழை சரியான காலத்தில் தொடங்கும் என தெரிவித்து உள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இந்த ஆண்டு அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும். 

கடைமடை வரை...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வக்கீல் அருண்ஷோரி நன்றி கூறினார்.

Next Story