குஜராத்தில் 1-5 வரையிலான வகுப்புகள் தொடக்கம்; மாணவர்கள் உற்சாகம்


குஜராத்தில் 1-5 வரையிலான வகுப்புகள் தொடக்கம்; மாணவர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:28 AM GMT (Updated: 22 Nov 2021 10:28 AM GMT)

குஜராத்தில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில் மாணவர்கள் உற்சாகமுடன் வருகை தந்தனர்.

ஆமதாபாத்,

குஜராத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில் கடந்த செப்டம்பர் 2ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், குஜராத் கல்வி மந்திரி ஜித்து வகானி நேற்று கூறும்போது, மாநிலத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன என கூறியுள்ளார்.

இதற்கான வருகை பதிவு கட்டாயமில்லை எனவும், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் (வகுப்புகளுக்கு தங்களுடைய குழந்தைகள் செல்லலாம் என்ற கடிதம்) கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டு உள்ளன.  இதனை முன்னிட்டு மாணவ மாணவியர் பள்ளிக்கு உற்சாகமுடன் வருகை தந்துள்ளனர்.

இந்த சூழலில், மாணவர்களின் வருகையை அடுத்து பள்ளிகள் நேற்று தூய்மைப்படுத்தப்பட்டன.  கட்டாய முக கவசங்கள், இயல்பான வெப்பநிலை, ஒப்புதல் கடிதம் மற்றும் தூய்மைப்படுத்தி கொள்ளுதல் ஆகியவற்றுக்கு பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story