ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானவர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா சென்றுவிட்டார் - கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி


ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானவர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா சென்றுவிட்டார் - கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 2 Dec 2021 4:20 PM GMT (Updated: 2 Dec 2021 4:20 PM GMT)

ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நபர்களில் ஒருவர் எந்த வித வெளிநாட்டு பயணமும் செய்யாதவர் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய மந்திரி சுதாகர், கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒருவர் 66 வயதுடைய தென் ஆப்பிரிக்க நாட்டவர். அவர் சொந்த நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார். மற்றொருவர் 46 வயது நிரம்பிய டாக்டர் ஆவார். இவர் எந்த வெளிநாட்டு பயணமும் செய்யாதவர். 

ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான டாக்டரின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் டாக்டருடன் சேர்த்து 6 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் தீவிரமனா அறிகுறிகள் இல்லை. 

வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள். துபாய் வழியாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அந்த நபர் தனியார் மையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சம்பித்துள்ளார். அந்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் (264) பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா சென்ற அந்த நபர் சமர்ப்பித்த சான்றிதழ் உண்மையானதாக இருக்கலாம்’ என்றார். 

Next Story