உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டி - சிவசேனா


உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டி - சிவசேனா
x
தினத்தந்தி 12 Jan 2022 8:26 AM GMT (Updated: 12 Jan 2022 8:26 AM GMT)

உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. 

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 முதல் 100 தொகுதிகள் வரை போட்டியிடும். நான் நாளை கிழக்கு உத்தரபிரதேசத்திற்கு பயணிக்க உள்ளேன்’ என்றார்.

முன்னதாக, உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரசின் நிலைபாடுகள் மராட்டிய அரசு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story