பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் யார்? - நாளை அறிவிப்பு


பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் யார்? - நாளை அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 8:25 AM GMT (Updated: 17 Jan 2022 8:25 AM GMT)

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என நாளை அறிவிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் வேட்பாளர் யார்? என நாளை மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக பக்வந்த் மன் அல்லது ஹர்பல் சிங் சீமா அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story