வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி- முழு விவரம்


SBI interest rates in tamil
x

பாரத ஸ்டேட் வங்கி வைப்பு நிதி காலத்தின் அடிப்படையில் வெவ்வேறு அளவில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.

புதுடெல்லி:

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), ரூ.2 கோடி வரையிலான வைப்பு நிதிக்கான (எப்.டி.) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.

46 முதல் 179 நாட்கள், 180 முதல் 210 நாட்கள், மற்றும் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 25 முதல் 75 வரை அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு மேற்பட்ட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மூத்த குடிமக்களின் வைப்பு நிதிகளுக்கு வங்கியின் நெறிமுறைகளின்படி கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 முதல் 179 நாட்கள் கொண்ட வைப்பு நிதிக்கு இதற்கு முன்பு 4.75 சதவீத வட்டி வழங்கப்பட்ட நிலையில், இப்போது 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 5.50 சதவீத வட்டி வழங்கப்படும். 180 முதல் 210 நாட்கள் மற்றும் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு, முறையே 6 சதவீதம் மற்றும் 6.25 சதவீதமாக உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வைப்பு நிதி காலத்தின் அடிப்படையில் வெவ்வேறு அளவில் வட்டி விகிதங்களை வழங்குகிறது. எந்தெந்த வைப்பு நிதிக்கு எவ்வளவு வட்டி என்பதை பார்ப்போம்.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.50%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 5.50%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 6.00%

211 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை- 6.25%

ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 6.80%

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 7.00%

3 வருடங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை - 6.75%

5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை- 6.50%


Next Story