மோட்டோ ஜி 31 ஸ்மார்ட்போன்


மோட்டோ ஜி 31 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 12 Dec 2021 9:45 AM GMT (Updated: 12 Dec 2021 9:45 AM GMT)

மோட்டரோலா நிறுவனம் புதிதாக மோட்டோ ஜி 31 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.4 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்கள் வந்துள்ளன. நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 180 கிராம் ஆகும். 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கிரே மற்றும் நீல நிறங்களில் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.12,999. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.14,999.

Next Story