புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:21 PM GMT (Updated: 31 Jan 2022 4:21 PM GMT)

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உள்ள நிலையில், அந்த நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை ஓர் ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, சண்டிகர், கவுகாத்்தி, பாட்னா, இந்தூர், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதயக் கோளாறுகள், தொற்றுநோய்கள் மற்றும் வளர்சிதைமாற்ற சீர்கேடு ஆகிய நோய்களுடன் ஒப்பிடுகையில் புற்றுநோய் கவலையளிக்கும் மிகப்பெரிய நோய் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. புற்றுநோய் வகைகளில் 84 சதவீதத்துக்கு உடனடி சிகிச்சைகள் அவசியம் என்று கூறப்படும் நிலையில், 34 சதவீத புற்றுநோய்களுக்கான சிகிச்சை குறித்து மட்டுமே பரவலான விழிப்புணர்வு உள்ளது.

இந்தியாவில் நோய் சார்ந்து ஏற்படும் இறப்புகளில், 8 சதவீதத்துக்கு புற்றுநோயே காரணம். ஆண்களின் புற்றுநோய் இறப்புகளுள் நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கருப்பைவாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் முக்கியமானவை.

புற்றுநோய் குறித்த அச்சம் இருக்கும் அளவுக்கு, அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. 58 சதவீதம் பேர் மட்டுமே புற்றுநோய் அறிகுறிகள் குறித்து அறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் பதில் அளித்த 85 சதவீதம் பேர் மருத்துவச் சிகிச்சைகளுக்கான கட்டணம் அதிகம் என்று நம்புவதால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வது தெரிய வந்திருக்கிறது.

புற்றுநோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால்தான், அதை குணப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குணப்படுத்த முடியாது என்று முன்பு கருதப்பட்ட புற்றுநோய்களை தற்போது குணப்படுத்த வழி உருவாகியிருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதுடன், முறையான சிகிச்சைகளை எளிதாக்க உதவும், என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Next Story