ஹோண்டா சி.பி.ஆர் 650.ஆர்.


ஹோண்டா சி.பி.ஆர் 650.ஆர்.
x
தினத்தந்தி 2 Feb 2022 9:06 AM GMT (Updated: 2 Feb 2022 9:06 AM GMT)

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹோண்டா நிறுவனம் புதிதாக சி.பி.ஆர் 650.ஆர். மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்கிறது.

இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்புகளை விற்பனை செய்யும் பிக்விங் டாப்லைன் விற்பனையகங்களில் மட்டுமே இது கிடைக்கும். இதற்கான முன்பதிவை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வித்தியாசமான மோட்டார் சைக்கிள் பயண அனுபவத்தை விரும்புவோருக்கு மிகவும் ஏற்றது. நீண்ட தூர பயணம், சாகச பயணத்தை விரும்புவோரின் தேர்வாகவும் இது அமையும். கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் இது வந்துள் ளது. பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ற வகையிலான என்ஜினைக் கொண்டது.

இது 648.72 சி.சி. திறன் மற்றும் நான்கு சிலிண்டரைக் கொண்டது. 57.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தக் கூடியது. 87.01 பி.எஸ். திறனை 12 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இதன் எடை 211 கிலோ. டியூப்லெஸ் டயர் மற்றும் அலாய் சக்கரங்களைக் கொண்டது. 15.4 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இரு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் உடையது.

Next Story