டார்க் எடிஷன் சபாரி


டார்க் எடிஷன் சபாரி
x
தினத்தந்தி 2 Feb 2022 9:13 AM GMT (Updated: 2 Feb 2022 9:13 AM GMT)

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் சபாரியாகும். இதில் புத்தாண்டை முன்னிட்டு டார்க் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் சிக்னேச்சர் ஓபலான் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் கருப்பு நிறம் பளபளப்பாகவே இருக்கும். இதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 18 அங்குல பிளாக்ஸ்டோன் அலாய் சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. உள்புறத்திலும் பிரத்யேகமாக பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் டேஷ்போர்டு உள்ளது. கருப்பு நிறத்திலான `நாப்பா’ பிராண்ட் தோல் இருக்கைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை காற்றோட்ட வசதி கொண்டவை. இதனால் நீண்ட நேரம் அமர்ந்தபடி பயணம் செய்தாலும் வியர்வை ஏற்படாது. எக்ஸ்.டி.பிளஸ், எக்ஸ்.டி.ஏ.பிளஸ், எக்ஸ்.இஸட்.பிளஸ், எக்ஸ்.இஸட்.ஏ.பிளஸ் உள்ளிட்ட அனைத்து வேரியன்ட்களிலும் டார்க் எடிஷன் கிடைக்கும்.

இதில் கூடுதல் சிறப்பம்சமாக காற்று சுழற்சி கொண்ட இருக்கைகள், ஏர் பியூரிபயர், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியன வை-பை இணைப்பில் செயல்படுபவைகளாக வந்துள்ளன. காரினுள் உள்ள காற்றின் தூய்மையை அறிய உதவும் வசதியும் இதில் உள்ளது. இதில் 2 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 170 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 6 ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர் வசதி கொண்டது. இதே பிரிவில் உள்ள எம்.ஜி. ஹெக்டார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500. மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story