`நாய்ஸ் ஐகான் பஸ்’ ஸ்மார்ட் கடிகாரம்


`நாய்ஸ் ஐகான் பஸ்’ ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 9 Feb 2022 9:18 AM GMT (Updated: 9 Feb 2022 9:18 AM GMT)

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நாய்ஸ் நிறுவனம் புதிதாக ஐகான் பஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் 1.69 அங்குல எல்.சி.டி. திரை உள்ளது. 9 வகையான உடற் பயிற்சிகள் (ஓட்டம், டிரெட்மில், நடைப் பயிற்சி, ஸ்பின்னிங், சைக்கிளிங், யோகா, மலையேற்றம்) உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடும் போது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் கணக்கிடும். இது 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும். அதேபோல ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். கருப்பு, சில்வர் கிரே, ஆலிவ் கோல்டு மற்றும் மிட்நைட் கோல்டு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.3,499.

Next Story