பழங்கால ‘பலே’ கட்டிடங்கள்..!


பழங்கால ‘பலே’ கட்டிடங்கள்..!
x
தினத்தந்தி 11 March 2022 4:24 PM GMT (Updated: 11 March 2022 4:24 PM GMT)

கட்டிடக் கலை இன்று நவீனமயமாகிவிட்டது. கட்டுமானத்தை எளிதாக்க புதிய நுட்பங்கள் பிறந்துவிட்டன. இந்த நுட்பத்தால் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்காத வகையில் எங்கு வேண்டுமானாலும் பிரம்மாண்டமான வானுயரக் கட்டிடங்களை கட்ட முடிகிறது. ஆனால், நவீன கால தொழில்நுட்பங்களுக்கு முன்பாகவே வியக்கத்தக்க சில கட்டுமானங்களை கட்டியிருக்கிறார்கள். அவற்றை புகைப்பட தொகுப்பாக தெரிந்து கொள்வோமா..?

1. ஹேங்கிங் டெம்பிள்

சீனாவில் ஒரு மலையின் இடையே கோவிலைக் கட்டியிருக்கிறார்கள்.

2. தத்தோங்

சீனா தத்தோங் நகரத்திலுள்ள ஒரு கட்டிடம் பூமியிலிருந்து 246 அடி உயரத்தில், பாதி அந்தரத்தில் இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அது 1500 ஆண்டுகள் பழமையானது.

3. சட்யாகெய்ன் ஹவுஸ், ரஷியா

இந்தக் கட்டிடம் உலகின் அதிசயத்தக்க அபாயகரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இடிந்து விழும் நிலையில் இருப்பினும், கடந்த 30 ஆண்டு களாக கம்பீரமாகவே நிற்கிறது.

4. டக்காசுகி அன், ஜப்பான்

மூன்று மரங்களை அடித்தளமாக கொண்டு உயர எழுப்பப்பட்ட கட்டிடம் இது. 4 பேர் தங்க முடியும்.

5. மீடியோராவில் மோனாஸ்ட்ரீஸ், கிரீஸ்

நெருக்கடியான மலை உச்சியில் கட்டப்பட்ட அரண்மனை இது. அரசர்கள் பயன்படுத்தியது. இன்று புதுப்பொலிவுடன் பராமரிக்கப்படுகிறது.

6. லிச்டென்ஸ்டீன் காஸ்டில், ஜெர்மனி

கூம்பு வடிவ மலை உச்சியில் எப்படி, இப்படியொரு அரண்மனையை கட்டியிருப்பார்கள் என்ற கேள்வி, இதை பார்த்து ரசிக்கும் எல்லோர் மனதிலும் எழுவது சகஜமே.

7. பைசா கோபுரம், இத்தாலி

1372-ம் ஆண்டு திறக்கப்பட்ட பைசா கோபுரம், இன்றளவும் வானுயர நிற்பதே, பேரதிசயம்தான். அது சாய்ந்திருந்தாலும் பராவாயில்லை என்பது, உலக மக்களின் கருத்து.

Next Story