வேலைவாய்ப்பு செய்திகள்: டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி


வேலைவாய்ப்பு செய்திகள்: டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி
x
தினத்தந்தி 13 March 2022 9:36 AM GMT (Updated: 13 March 2022 9:36 AM GMT)

இர்கான் (ஐ.ஆர்.சி.ஓ.என்) இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணி பிரிவுகளில் 389 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய ரெயில்வே மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்ற கட்டுமான நிறுவனமான இர்கான் (ஐ.ஆர்.சி.ஓ.என்) இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயர், சூப்பர் வைசர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 389 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிப்ளமோ, என்ஜினீயரிங், பட்டப்படிப்பு, எம்.எஸ்.சி., எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.ircon.org/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

Next Story