மருந்து வணிகத்தில் மக்களின் எதிர்பார்ப்பு


மருந்து வணிகத்தில் மக்களின் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 March 2022 4:21 PM GMT (Updated: 25 March 2022 4:21 PM GMT)

மருத்துவ துறை மருந்து வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் காய்கறி முதல் சாப்பாடு வரை அனைத்துமே வீடு தேடி வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் மருந்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. நேரடி மருந்து வணிகத்தில் 7.25 லட்சம் மருந்துக் கடைகள், 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வணிகம் நடப்பதாக மருந்து வணிக அமைப்புகள் சொல்கின்றன.

இவ்வளவு பெரிய வருமான-வேலைவாய்ப்பு தரும் கட்டமைப்பு இதில் உள்ளதாக அத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் ஆன்லைன் மருந்து வணிகத்தால் இந்த கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பி, ஆன்லைன் மூலம் மருந்தைப் பெறுவதில் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? என்பது மற்றொரு தரப்பு கருத்து. இதில் சில சி்க்கல் இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள். அதாவது, மருந்துச்சீட்டு கிறுக்கலாக உள்ளதால், ஆன்லைன் பார்மசிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார்கள். இருந்தாலும் முறைப்படி பார்மசி படித்த எத்தனை பேர், மருந்துக்கடைகளில் வேலை பார்க்கிறார்கள் என்ற கேள்வியை ஆன்லைன் நிறுவனத்தினர் எழுப்புகிறார்கள்.

இவ்வாறு இருவேறு கருத்துகளுக்கு தீர்வு கூறும் வகையில், மருத்துவ துறை இந்த மருந்து வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆன்லைன் மூலம் வீடு தேடி வரும் மருந்துகளோ அல்லது, மருந்துச் சீட்டை கொடுத்து மருந்து கடைகளில் வாங்கும் மருந்துகளோ தரமானதாகவும், உரிய விலையிலும் நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.



Next Story