தக்காளி சாஸ் பாட்டிலும்... இயற்பியல் விதியும்...


தக்காளி சாஸ் பாட்டிலும்... இயற்பியல் விதியும்...
x
தினத்தந்தி 1 April 2022 4:22 PM GMT (Updated: 1 April 2022 4:22 PM GMT)

சமோசா அல்லது சான்ட்விச் ஆகியவற்றுக்கு தொட்டுக்கொள்ள கடைகளில் பதப்படுத்தப்பட்ட தக்காளி சாறு (சாஸ்) வைத்திருப்பார்கள். தக்காளி சாஸ் விழாமல் போவதற்கும், இயற்பியலுக்கும் தொடர்பு உண்டு.

பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் அதனை நாம் தலைகீழாகக் கவிழ்த்தாலும் சில நேரம் வராமல் அடம்பிடிக்கும். இருதட்டு தட்டி, கொஞ்சம் குலுக்கினால் மட்டுமே மெதுவாக எட்டிப்பார்க்கும்.

தக்காளி சாஸ் விழாமல் போவதற்கும், இயற்பியலுக்கும் தொடர்பு உண்டு.

அதற்கு நாம் பாகுநிலை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். ஒரு திரவத்தின் இரண்டு அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று எவ்வளவு தூரம் வழுக்கிக்கொண்டு நகர முடியும் என்பதன் அளவீடே பாகுநிலை. நீரில் எளிதாக இருக்கும் இந்த நகர்வு, தேனில் கடினமாக உள்ளது. திரவ அடுக்குகளுக்கு இடையேயான ஈர்ப்பு அல்லது விலக்கு விசையே இதை தீர்மானிக்கிறது.

தேன் போன்ற திரவங்களில் ஒவ்வொரு அடுக்கிலும் இருக்கும் மூலக்கூறுகளுக்கு இடையேயான ஈர்ப்புவிசையே அதன் அதிக பாகுநிலைக்கு காரணம்.

நீர், திரவ எரிபொருட்கள் போன்ற திரவங்களின் மீது எவ்வளவு விசை செயல்பட்டாலும், அவற்றின் பாகுநிலை மாறாது. விசைக்கும் பாகுநிலைக்கும் தொடர்பற்ற இந்த வகை திரவங்களின் பாய்வை, சமன்பாடுகள் வழியாக முதலில் விளக்கியவர், நியூட்டன் என்பதால் அவர் பெயராலேயே ‘நியுட்டோனியப் பாய்மங்கள்’ என்று அவை வழங்கப்படுகின்றன.

பொதுவாகவே சாதாரண நிலையில் தக்காளி சாஸ் அதன் அடுக்குகளுக்கு இடையேயான ஈர்ப்புவிசையால் அசைந்து கொடுக்காது. ஆனால், தட்டுதல், குலுக்குதல் போன்ற விசைகளால் அடுக்குகளுக்கு இடையேயான விசை குறையும். அப்போது பாகுநிலை குறைந்து சாஸ் நகர ஆரம்பிக்கும். இந்தச் சூட்சுமம் புரிந்துவிட்டால், சாஸ் பாட்டிலை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு ஊற்ற வேண்டும் என்று தெரிந்துவிடும்.


Next Story