கோயம்பேடு சந்தைக்கு ஞாயிறு விடுமுறை... காய்கறிகள் விலை அதிகரிக்காது - வியாபாரிகள் தகவல்


கோயம்பேடு சந்தைக்கு ஞாயிறு விடுமுறை... காய்கறிகள் விலை அதிகரிக்காது - வியாபாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2022 10:11 AM GMT (Updated: 7 Jan 2022 10:11 AM GMT)

கோயம்பேடு சந்தைக்கு ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை அதிகரிக்காது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் அதிக விலைக்கு விற்பனையாகி வந்த தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை தற்போது குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வரும் 5 டன் காய்கறிகளும் எந்த தடையும் இன்றி வந்து கொண்டிருப்பதால், விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை ஆகாது என்று கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் காய்கறி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், கோயம்பேடு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை கொள்முதல் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story