வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு சம்பளம்


வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு சம்பளம்
x
தினத்தந்தி 14 April 2022 4:13 PM GMT (Updated: 14 April 2022 4:13 PM GMT)

வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

7-வது ஊதியக்குழு பரிந்துரை

புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வதுஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான நிலுவைத்தொகையும் கடந்த மாதம் முழுமையாக வழங்கப்பட்டது.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று சொசைட்டி கல்லூரிகள், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

250 ஊழியர்கள்
புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு இந்த மாதம் 1-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் சுமார் 250 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story