6 பெண் எம்.பி.க்களுடன் சசி தரூர் : வைரலாகும் புகைப்படம்!!


6 பெண் எம்.பி.க்களுடன் சசி தரூர் : வைரலாகும் புகைப்படம்!!
x
தினத்தந்தி 29 Nov 2021 9:52 AM GMT (Updated: 29 Nov 2021 10:19 AM GMT)

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பாராளுமன்றத்தில் இன்று வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மக்களவையில்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா  நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது.  பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில்  6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின்  சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் போஸ் கொடுத்தனர்.

இதனை பலரும் பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். எழுத்தாளர் வித்யா கிருஷ்ணன் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் உள்ள பெண்கள் உங்கள் பணியிடத்தை "அழகாக" மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்" என்று  கூறினார்.

இதை தொடர்ந்து  சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார். 

அவர் தனது அடுத்த டுவிட்டில்  முழு செல்பி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது. அதே உணர்வில் அதை டுவீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சசிதரூர் கூறி உள்ளார்.


Next Story