ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:50 AM GMT (Updated: 28 Jan 2022 9:02 AM GMT)

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

இன்று  நடந்த  அரையிறுதி போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.

இதில் முதல் 2 செட்டை நடால் கைப்பற்றினார். 3-வது செட்டை பெரேட்டினி தன்வசப்படுத்தினார். 4-வது செட்டை ரபேல் நடால் எளிதாக கைப்பற்றினார். இதனால்  நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை  நடக்கும் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவ் அல்லது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் நடால் விளையாடுவார்.


Next Story