வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 22 March 2022 9:49 AM GMT (Updated: 22 March 2022 9:49 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

திருமந்திரத்தில் உள்ள மூவாயிரம் பாடல்களையும் இயற்றி முடிக்க, திருமூலருக்கு மூவாயிரம் வருடங்கள் ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட இந்த நூலை, அவர் அத்தனை வருடங்கள் ஆழமாக சிந்தித்து இயற்றியுள்ளார். சைவ நெறியைப்பற்றி எடுத்துரைக்கும் திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:-

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள

நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்

என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்

மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.

விளக்கம்:-

ஒரு நாட்டின் இன்பமும், துன்பமும் அந்த நாட்டில் உள்ளவர்கள் செய்யும், நல்ல செயல்களாலும், தீய செயல்களாலும் விளைபவை. அதனால் நாட்டை ஆளும் வேந்தன் நாள்தோறும் ஆராய்ந்து, நல்லவர்களை காத்தும், தீயவர்களுக்கு தண்டனை வழங்கியும் சமுதாயத்தைக் காத்தால், உலகம் நன்கு செழித்து வாழும்.

Next Story