ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 15 Jan 2022 9:12 AM GMT (Updated: 15 Jan 2022 9:12 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன

 கோவா, 

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஏடிகே மோகன்  பகான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன 

ஏ டி கே மோகன்  பகான் அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி ,3  டிரா ,2 தோல்வி என புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது . பெங்களூரு அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றி ,4 டிரா  ,4 தோல்வி  என புள்ளி பட்டியலில்  7 வது இடத்தில் உள்ளது .

Next Story