பிபா கிளப் கால்பந்து உலகக்கோப்பை; செல்சியா அணி மகுடம் சூடியது


பிபா கிளப் கால்பந்து உலகக்கோப்பை; செல்சியா அணி மகுடம் சூடியது
x
தினத்தந்தி 13 Feb 2022 9:17 AM GMT (Updated: 13 Feb 2022 9:17 AM GMT)

செல்சியா கிளப் அணி முக்கியமான கிளப் தொடர் கோப்பைகள் அனைத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் பிபா கிளப் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  பிரேசிலின் கிளப் அணியான பால்மிராஸ் மற்றும் இங்கிலாந்து கிளப் அணியான செல்சியா ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பால்மிராஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் செல்சியா அணி வீழ்த்தியது. இதன்மூலம்,  பிபா கிளப் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் முதன்முறையாக செல்சியா அணி மகுடம் சூடியது. 

அந்த அணியின் காய் ஹாவெர்ட்ஸ், 117வது நிமிடத்தில் பெனால்ட்டி கிக் ஷாட்டில் கோல் ஒன்றை அடித்து எதிரணியின் வெற்றி வாய்ப்பை மழுங்கச் செய்தார். இதன்மூலம், செல்சியா கிளப் அணி முக்கியமான கிளப் தொடர்  கோப்பைகளை அனைத்தையும் வென்று அசத்தி சாதனை படைத்துள்ளது. பால்மிராஸ் அணியின் தியாகோ சில்வா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

Next Story