சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதி ஆட்டத்தில் கேரளா - கர்நாடகா அணிகள் பலப்பரிட்சை


சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதி ஆட்டத்தில் கேரளா - கர்நாடகா அணிகள் பலப்பரிட்சை
x
தினத்தந்தி 28 April 2022 9:21 AM GMT (Updated: 28 April 2022 9:21 AM GMT)

கேரள அணி கடைசியாக 2017-18 சந்தோஷ் கோப்பையை வென்றிருந்தது. இதனால் இம்முறை கோப்பையை வெல்ல அதிக முனைப்பு காட்டும்.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில், கேரளா - கர்நாடகா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில், மேற்கு வங்கம் - மணிப்பூர் அணிகள் களம் காண உள்ளன.

கேரள அணி முதன்முறையாக 1973ம் ஆண்டு சந்தோஷ் கோப்பையை வென்றிருந்த போது, அதில் முக்கிய புள்ளியாக திகழ்ந்த கால்பந்து வீரர் பி தேவானந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அதன் பின் 6 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிறது கேரள அணி. 

கேரள அணி கடைசியாக 2017-18 சந்தோஷ் கோப்பையை வென்றிருந்தது. இதனால் இம்முறை கோப்பையை வெல்ல அதிக முனைப்பு காட்டும்.

Next Story