புரோ கபடி லீக்: யுபி யோத்தா, பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: யுபி யோத்தா, பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 17 Feb 2022 4:28 PM GMT (Updated: 17 Feb 2022 4:28 PM GMT)

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யுபி யோத்தா, பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு.பி யோத்தா- யு மும்பா அணிகள் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யுபி யோத்தா அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி அரியானா ஸ்டீலர்ஸ்சை 46-24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதனை அடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.


Next Story