பெண்கள் கோப்பை டென்னிஸ்: தொடர்ச்சியாக 20 போட்டிகளை வென்று கொன்டாவெய்ட் சாதனை..!


பெண்கள் கோப்பை டென்னிஸ்: தொடர்ச்சியாக 20 போட்டிகளை வென்று கொன்டாவெய்ட் சாதனை..!
x
தினத்தந்தி 14 Feb 2022 9:46 AM GMT (Updated: 14 Feb 2022 9:46 AM GMT)

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பெண்கள் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று எஸ்தோனியாவின் கொன்டாவெய்ட் மகுடம் சூடினார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷியாவில் நடைபெற்று வரும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பெண்கள் கோப்பை டென்னிஸ் தொடரில் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த அனெட் கொன்டாவெய்ட் பட்டம் வென்றார்.

இதன்மூலம் 1990ம் ஆண்டுக்கு பின், தொடர்ச்சியாக 20  உள் அரங்க போட்டிகளை வெல்லும் 6-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 26 வயதான எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவெய்ட், (5-7, 7-6(7/4), 7-5) என்ற செட் கணக்கில்  கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி மகுடம் சூடினார். இது அவர் வெல்லும் 6-வது டென்னிஸ் பட்டம் ஆகும். அவர் பெற்ற 6 பட்டங்களில் கடைசியாக பெற்ற 5 பட்டங்கள் கடந்த 7 மாதங்களில் நடைபெற்ற தொடர்களில் அவர் பெற்றவை ஆகும். மேலும் உலக  தரவரிசையில் டாப் 10க்குள் முதன்முறையாக இடம்பிடித்தார்.

Next Story