மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: படோசாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஹாலெப்..!


image courtesy:  Simona Haleb twitter via ANI
x
image courtesy: Simona Haleb twitter via ANI
தினத்தந்தி 1 May 2022 10:19 AM GMT (Updated: 1 May 2022 10:19 AM GMT)

நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் சிமோனா ஹாலெப் மற்றும் பவுலா படோசா மோதினர்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், உலகின் நம்பர் 2 வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

1 மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story