dailythanthi

இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை..!
சென்னை,

தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'எல்நினோ' தாக்கம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், 'எல்நினோ' தாக்கத்தால் மழை அதிகம் பெய்யவில்லை. எதிர்பார்த்த மழை இல்லாததால் பல இடங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு விலக தொடங்கியது. அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

வளிமண்டல சுழற்சி

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.

மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியபகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

கனமழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார்வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது.

இதையொட்டி இன்று (15.10.2026) விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை. தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மழை

இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த காற்று

இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை காணப்படும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக பருவமழை தொடங்கும் போதே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

உலகப்பொருளாதார வளர்ச்சியில் சீனா-அமெரிக்காவை முந்தும் இந்தியா
புதுடெல்லி,

உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியா முந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார அவுட்லுக்

சர்வதேச நாணய நிதியம் என்பது உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய வறுமையை ஒழிக்கவும் பாடுபடும் 191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு சர்வதேச கடன் வழங்கும் அமைப்பாகும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் நிதிச் சந்தைகளின் எதிர்கால நிலவரங்களை முன்கூட்டியே கணித்து சர்வதேச நாணய நிதியம் ஆண்டுக்கு இருமுறை 'உலகப் பொருளாதார அவுட்லுக்' அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இதற்கான மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது முறைப்படி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

உலகப் பொருளாதார வளர்ச்சி

நடப்பு 2026-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 3.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஜூலை மாதம் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சியை விட அதிகமாகும். அதேவேளையில், 2025-ம் ஆண்டின் 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை விட இது கணிசமாகக் குறைவு ஆகும்.

வரும் 2027-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக மீண்டும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்புகள் அனைத்தும் நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 41 சதவீதம் அதிகரித்து, சராசரியாக பேரலுக்கு 96 டாலராக உயரும் என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளன.

95 சதவீத பங்களிப்பு

உலகளாவிய பணவீக்கம் 2026-ல் 4.7 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் அது 4.1 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து மார்ச் மாதத்திற்குள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்றும், செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ.) உலகளாவிய தேவை சற்றே குறையும் என்றும் நம்பப்படுகிறது.

வேலைவாய்ப்பில் ஏ.ஐ.யின் தாக்கம் மெதுவாக நகரும் ஒரு சுனாமிபோல உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே குவிந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, உலகளாவிய ஒட்டுமொத்த வளர்ச்சியில் 95 சதவீத பங்களிப்பை வெறும் 32 நாடுகள் மட்டுமே வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா வளர்ச்சி

இந்தியா மீண்டும் ஒருமுறை உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாகத் திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதிவான 7.7 சதவீதம் என்ற அதிரடி வளர்ச்சியை விட சற்றே குறைந்து, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டிலும் (2027) 7 சதவீதம் என்ற நிலையான வேகத்தில் இந்தியா வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. இதேவேளையில், அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 2.3 சதவீதம் மற்றும் 4.5 சதவீத அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

தோகைமலை முருகன் கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மூலவர் சிலை மீண்டும் பிரதிஷ்டை
தோகைமலை,

தோகைமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மூலவர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பழமையான சிலை

கரூர் மாவட்டம், தோகைமலை, மலை மீது அமைந்துள்ள இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பழமையான மூலவர் சிலையை மாற்றிவிட்டு, புதிய கற்சிலை நிறுவப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலதண்டாயுதபாணி

பின்னர், கோவில் அருகே உள்ள சுனை நீரில் வைக்கப்பட்டிருந்த பழமையான சிலை மீட்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதற்கிடையே, பழமையான சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழமையான பாலதண்டாயுதபாணி சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

மீண்டும் பிரதிஷ்டை...

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் சக்கரவர்த்தி, கோவில் செயல் அலுவலர் ராதிகா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், அனுமதியின்றி நிறுவப்பட்ட புதிய ராஜ அலங்கார கற்சிலையை அகற்றிவிட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பழமையான மூலவர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். அகற்றப்பட்ட புதிய சிலை கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

மேலும், பாலதண்டாயுதபாணி கோவிலில் இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தி, பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கோவில் மண்டகப்படிதாரர்கள், நாட்டாமைகள், ஊர் முக்கியஸ்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை
புதுடெல்லி,

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த வழக்கு மீது சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

பிரமாண்ட பேரணி

தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தில் பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் டெல்லியில் சுப்ரீம்கோர்ட்டு நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட 11 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கூட்டாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இடைக்காலத் தடை

அந்த மனுவில், "வாக்காளர் பட்டியலில் இருந்து முறையற்ற வகையில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும். மாநிலங்களில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

14 குறைபாடுகள்

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், மனுவில் பல குளறுபடிகள் இருப்பதாகக் கூறி சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் அதனை விசாரணை பட்டியலில் சேர்க்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் அலுவலக தகவலின்படி, இந்த மனுவில் மொத்தம் 14 குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, வழக்கின் கூட்டு மனுதாரரான காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இணைக்கப்படவில்லை என்றும், மனுவின் சில பக்கங்கள் படிக்க முடியாதவாறு மங்கலாகவும், சில பக்கங்கள் விடுபட்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த். "நாங்கள் இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு பட்டியலிடத் தயாராகவே இருக்கிறோம். மனுவில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் முதலில் சரி செய்யுங்கள்" என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்  வாக்காளர் பட்டியல் முறைகேடு, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது. ராகுல்காந்தி, கார்கே, அகிலேஷ், தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு விசாரிக்க உள்ளது.

4-வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகள் வீழ்த்தி கீமோ பால் அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
ஐதராபாத்,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய கீமோ பால்  5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஷாய் ஹோப் அதிரடி

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

மற்றொரு வீரர் ரூதர்போர்டு 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஷிம்ரன் ஹெட்மையர் 12 பந்துகளில் 33 ரன்களும், ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

248 ரன்கள்

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 248 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.  இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 56 (23) ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்களும், அபிஷேக் சர்மா 29 ரன்களும், நமன் திர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

அடுத்ததாக திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் குவித்து வந்த இந்த ஜோடியில் திலக் வர்மா 43 (25) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி 41 (20) ரன்களும், அடுத்து களமிறங்கிய பிரின்ஸ் யாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அக்சர் பட்டேல் 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம் ஏற்பட ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதியில் இந்திய அணி  19.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய கீமோ பால்  5 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும், ஷெப்பர்ட் மற்றும் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இதன்படி டி20 கிரிகெட் தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள்  2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்
மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (14-10-2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது

பங்குச்சந்தை சரிவு

அதன்படி, 99 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 622 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 165 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 316 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.

279 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 948 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 251 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 72 ஆயிரத்து 781 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.

அதேவேளை, 11 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 773 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 75 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 363 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா: இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
ரியாத்,

சவுதி அரேபியாவில் இலங்கை தமிழர் அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராஜா (வயது 27). இந்து மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார்.

பேஸ்புக்கில் மோதல்

இதனிடையே, இலங்கையில் கடந்த ஜுன் மாதம் இந்து மதத்தினர் பலரும் யாழ்பாணத்தில் உள்ள இந்து மதக்கடவுள் முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். அப்போது, கோவிலுக்கு செல்லும் பக்தர்களுடன் செல்லப்பிராணி நாய் பின்தொடர்ந்து சென்றுள்ளது. அந்த செல்லப்பிராணி நாய் இலங்கையில் பிரபலமான நிலையில் கோவில் அருகே சுற்றித்திரிந்த அந்த செல்லப்பிராணி நாயை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபர் அடித்து விரட்டி அதை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது இரு மதத்தினர் இடையேயான கருத்து மோதலாக பேஸ்புக்கில் உருவானது.

ஆபாச கருத்துகள்

அப்போது, அந்த வீடியோவுக்கு கீழே கமண்ட் பிரிவில் இந்து மதக்கடவுள் சிவபெருமான் குறித்து ஆபாசமான கருத்துக்களை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபர் தமிழில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்லாமிய மதக்கடவுள் அல்லா குறித்தும், இஸ்லாமிய மத இறைதூதர் முகமது நபி குறித்தும் இந்து மதத்தை சேர்ந்த அனோஜன் சிவராஜா ஆபாசமான கருத்துகளை தமிழில் பதிவிட்டார். பின்னர், அந்த பேஸ்புக் பதிவை நீக்கிய அனோஜன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, அனோஜன் சிவராஜா இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து தமிழில் பதிவிட்ட கருத்தை ஸ்கிரீன் ஸ்டார்ட் எடுத்து அதை அரபிய மொழியில் மொழிப்பெயர்த்து இலங்கையை சேர்ந்த சிலர் சவுதி அரேபியாவில் அனோஜன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து சவுதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அனோஜன் கைது

இதனை தொடர்ந்து இஸ்லாமிய மதக்கடவுளை அவமதித்ததாக அனோஜன் சிவராஜாவை சவுதி அரேபியா போலீசார் ஜுலை மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவருக்கு எதிரான வழக்கு சவுதி கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் அந்த வழக்கில் அனோஜனுக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமாக விதிக்கப்பட்டது.

மரண தண்டனை

பின்னர், இந்த வழக்கின் மேல்முறையீட்டில் அனோஜன் சிவராஜாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்து சவுதி கோர்ட்டு உத்தவிட்டது.

அதேவேளை, அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கையில் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலும் அனோஜனுக்கு ஆதரவு குரல் எழுந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் அந்நாட்டு அரசு சவுதி அரேபியாவுக்கு அனுப்பி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.

மரண தண்டனை ரத்து

இந்நிலையில், அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.  அனோஜனின் மரண தண்டனை ரத்து விவகாரத்தில் இலங்கை அரசின் சட்டரீதியிலான முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை தமிழர் அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலை செய்யப்படுவாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட சிறை தண்டனை தொடருமா? அவரது நிலை தற்போது என்ன? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அனோஜன் சிவராஜாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன்
சென்னை,

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

திமுகவின் இந்து விரோத கொள்கையை தவெகவும் பின்பற்றுகிறதா?

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்.

திமுக அரசைப் போலவே, சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுப்புக்கு த.வெ.க., அரசு தடை விதித்துள்ளது. 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி, நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தடை விதித்ததுடன், எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு தொந்தரவு கொடுத்தனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றுதான் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்த வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு. எனவே, நாடு முழுவதும் சீருடை அணிவகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால், திமுக அரசைப் போலவே, தவெக அரசும் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி மறுப்பது ஏன்?" கேள்வி எழுப்பியுள்ளது.

த.வெ.க. அரசு அமைந்த பிறகு முதல் - அமைச்சர் விஜய் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்கிறார். ஆனால், திமுகவைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தடை விதிக்கிறார். இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புகள், மிகவும் அமைதியாக, மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்துள்ளன. அப்படியிருக்கும்போது எதற்காக இந்த தடை?

திமுகவில் பல ஆண்டுகள் பணியாற்றி, அதன் இந்து விரோதப் போக்கு ஊறிப்போன சிலர். த.வெ.க., அரசில் இருப்பதுதான் இதற்கு காரணமா? ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கான தடையை பார்க்கும்போது திமுக தான் தவெகவா என்ற கேள்வி எழுகிறது.

அனைவருக்கும் பொதுவானவர் என்று முதல் - அமைச்சர் ஜோசப் விஜய் சொல்வது உண்மையாக இருந்தால், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு அவர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை யூடியூபர் வீரமணியை குறிப்பிட்டு கேரளம் காவல்துறை விழிப்புணர்வு பதிவு
திருவனந்தபுரம்,

மதுரையை சேர்ந்த யூடியூபர் வீரமணி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தன்னை பின்தொடர்பவர்கள் தனக்கு இனிப்புகளை (ஸ்வீட் பாக்ஸ்) அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தனது வீட்டின் முகவரியையும், செல்போன் எண் ணையும் பொதுவெளியில் வெளியிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட நெட்டி சன்கள் விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், செல்போன் உள்ளிட்ட பொருட்களை 'கேஷ் ஆன் டெலிவரி' மூலம் அவரது முகவரிக்கு ஆர்டர் செய்தனர்.

பொருட்கள் குவிந்துகொண்டே இருந்தால் அதனை பெறமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி வீட்டை பூட்டி விட்டு வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாக தக வல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வீரமணியின் புகைப்படத்தை குறிப்பிட்டு கேரளம் காவல்துறை ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக ஊடகங்களில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் டிரெண்டுகளில் நாம் மூழ்கிவிடும்போது, நமது சொந்த பாதுகாப்பை பற்றி மறந்து விடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

சிக்கிம் கவர்னராக துஷ்யந்த் குமார் கவுதம் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: டெல்லி இந்தியா கேட்டில் போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் 2022ஆம் ஆண்டு ஒரு கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.  இந்த கொலையில் தற்போது சிக்கிம் கவர்னராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருப்பதாக அங்கிதா பண்டாரியின் பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

எனவே, துஷ்யந்த் கவுதம் தற்போது சிக்கிம்  கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அங்கிதா பண்டாரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கவர்னருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது  என்பதால், அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுதியிருப்பதாக தெரிகிறது.

கொலை வழக்கில் தொடர்புடைய துஷ்யந்தை கவர்னராக நியமித்ததற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிதா பண்டாரியின் பெற்றோரை இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தியுடன் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கையில் சோகம்: மின்னல் தாக்கி 2 பெண் விவசாயிகள் பலி
சிவகங்கை,

மின்னல் தாக்கி 2 பெண் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 பெண்கள் பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி சவுரியம்மாள். அதே பகுதியை சேர்ந்த அழகன் என்பவரின் மனைவி பெரிய கருப்பி. பெரிய கருப்பி மற்றும் சவுரியம்மாள் அகிய இருவரும் இன்று வயலில் வேலை பார்த்து வந்தனர்.

அந்தவேளை, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, மழையில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக இருவரும் அருகிலிருந்த மரத்திற்கு அடியில் இருவரும் ஒதுங்கினர். அந்தவேளை, திடீரென மின்னல் மரத்திற்கு அடியில் இருவரையும் மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த சவுரியம்மாள் மற்றும் பெரிய கருப்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் கோட்டம்

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகரசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலைய பகுதிகளில்  நாளை (15.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி,  பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளாக முடி வெட்டாத விசித்திர பாட்டி!
ஹனோய்,

ஒரு சாதாரண நம்பிக்கை மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக, வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வரும் விசித்திர சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தலைவலியும்... விசித்திர நம்பிக்கையும்

வியட்நாமின் பென் ட்ரே மாகாணத்தைச் சேர்ந்தவர் குயென். இவருக்கு 18 வயதாக இருந்தபோது திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் பெற்றும் தலைவலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தனது தலைமுடியை வளர்க்க தொடங்கியவுடன், ஆச்சரியப்படும் விதமாக தலைவலி படிப்படியாக குறைந்துள்ளது. இதனால், தனக்கு ஏற்பட்ட தலைவலிக்கு முடி வெட்டியதுதான் காரணம் என்றும், முடியை வளர்த்தால் மட்டுமே தலைவலி வராது என்றும் அவர் ஆழமாக நம்பத் தொடங்கினார்.

பாம்பு போல் மாறிய தலைமுடி

அன்று முதல் இன்று வரை, அதாவது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட முடியை வெட்டவில்லை. அதுமட்டுமின்றி, தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்தாலும் தலைவலி வருவதாக கூறி, முடியை கழுவுவதையும் பல தசாப்தங்களாக நிறுத்திவிட்டார்.

இதன் காரணமாக, அவரது தலைமுடி சீவப்படாமல், ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து சுமார் 20 அடி நீளத்திற்கு ஒரு பெரிய விசித்திரப் பாம்பு போன்ற ஜடாமுடியாக மாறியுள்ளது.

கோவிலில் தஞ்சமடைந்த பாட்டி

இந்த பாட்டிக்கு, இவ்வளவு நீளமான முடியை சுமப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால், தனது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடி வரும் இவர், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் அங்குள்ள ஒரு புத்தர் கோவிலில் தங்கி எளிய ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

"மீண்டும் நான் முடி வெட்டினால் எனக்கு் கடுமையான தலைவலி வந்துவிடும், அதனால் சாகும் வரை என் முடியை வெட்ட மாட்டேன்" எனப் பாட்டி குயென் இப்போதும் பிடிவாதமாக கூறி வருகிறார்.

16 ஆம் தேதி புதிய போராட்டம் அறிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின்  முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு சில இடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த  கரப்பான் பூச்சி ஜனதா, நேற்று தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்தியது. சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை அசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதையடுத்து, அங்கு காவலில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையி அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16-ந்தேதி மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியை ஏற்றும்  போராட்டத்திற்கு அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

“சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். தேசியக் கொடியை ஏற்றுவது குற்றமல்ல.

எனவே, தேசபக்தர்களும், மூவர்ணக் கொடியை நேசிக்கும் அனைவரும் அக்டோபர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அங்கு தேசியக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நிரூபிப்போம்.டெல்லிக்கு வர முடியாதவர்கள் தங்கள் சொந்த நகரங்களில் மாலை நேரத்தில் மூவர்ணக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.  இந்த அழைப்பை விடுத்த பிறகு நான் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மூவர்ணக் கொடி எனது பெருமை; அதை நான் நிச்சயமாக ஏற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

"சச்சினின் அந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்தால்..." - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓபன் டாக்
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்தால், அது நம்ப முடியாத சாதனையாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் சமித் படேல் தெரிவித்துள்ளார்.

சச்சின் எனது முன்னுதாரணம்!

இதுகுறித்து சமித் படேல் கூறுகையில், “ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்தால், அது நம்ப முடியாத சாதனையாக இருக்கும். நான் வளர்ந்த காலத்தில் இருந்தே சச்சின் டெண்டுல்கர்தான் எனது ஹீரோவும் முன்னுதாரணமும். அவரது சாதனையை யாராவது முறியடித்தால், அது உண்மையிலேயே வியக்கத்தக்கதாக இருக்கும்” என்றார்.

நெருங்கும் ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 2026-ம் ஆண்டு நிலவரப்படி 14,278 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 1,644 ரன்கள் தேவைப்படுகின்றன.

தொடர்ந்து சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை
சேலம்,

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 787 கன அடியிலிருந்து 696 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் நீரின் அளவு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 59.58 அடியிலிருந்து 59.13 அடியாகக் குறைந்துள்ளது. தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 24.04 டிஎம்சியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சென்றுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் நடப்பாண்டுக்கான சம்பா சாகுபடிக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இந்தியர்கள் 3 பேர் பலி
பெர்லின்,

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஜெர்மனி. அந்நாட்டின் வடக்கு ரிஹ்னி - வெஸ்ட் ஹலி மாநிலம் போஷம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

3 இந்தியர்கள் பலி

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்த 3 பேரில் 2 பெண்கள் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர். ஆண் 26 வயதுடையவர்கள் ஆவர்.

உயிரிழந்த 3 பேரும் இந்தியர்கள் என்பது உறுதியான நிலையில் அவர்களின் சொந்த மாநிலம் எது?, உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, இந்த தீ விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ருமேனியா நாட்டை சேர்ந்த 41 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூமியில் ஒரு வேற்றுக்கிரகம்! ஏமன் நாட்டின் ‘சொகோட்ரா’ தீவின் விசித்திரங்கள்
பூமியில் தான் இருக்கிறோமா? அல்லது வேறு ஏதேனும் வேற்றுக்கிரகத்திற்கு வந்துவிட்டோமா? என்று மனிதர்களை திகைக்க வைக்கும் ஒரு விசித்திரத் தீவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏமன் நாட்டில் அமைந்துள்ள ‘சொகோட்ரா’ என்ற அந்த தீவுக்கூட்டம், உலகின் மாபெரும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

வேற்றுக்கிரக தோற்றம்

சொகோட்ரா தீவுக்குள் நுழைந்தாலே, பூமியில் வேறு எங்கும் காண முடியாத ஒரு விசித்திரமான நிலப்பரப்பு நம்மை வரவேற்கிறது. அரிய வகை உயிரினங்கள், வித்தியாசமான தாவரங்கள் என இத்தீவு முழுக்கவே ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன.

யுனெஸ்கோ வெளியிட்ட பட்டியல்

யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இத்தீவில் பல்லுயிர் பெருக்கம் கொட்டிக்கிடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

• 825 தாவர இனங்கள்: இத்தீவில் மொத்தம் 825 வகையான தாவரங்கள் உள்ளன. இதில் 307 தாவர இனங்கள் உலகிலேயே வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவை ஆகும்.

• 90 சதவீதம் ஊர்வன: இங்கு வாழும் 34 வகை ஊர்வன இனங்களில், சுமார் 90 சதவீத உயிரினங்கள் இந்தத் தீவிற்கே உரிய தனித்துவமானவை.

• 95 சதவீதம் நில நத்தைகள்: இங்குள்ள 96 நில நத்தை இனங்களில் 95 சதவீதம் உலகில் வேறு எங்கும் கிடையாது.

கடல்சார் வளம்

நிலப்பரப்பு மட்டுமின்றி, கடல் பகுதியிலும் சொகோட்ரா தீவு சாதனை படைத்துள்ளது. இங்கு 253 வகையான பவளப்பாறைகளை உருவாக்கும் உயிரினங்களும், சுமார் 730 வகையான கடலோர மீன்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதுதவிர, நண்டு, இறால் உள்ளிட்ட 300 வகையான ஓட்டு உடலி உயிரினங்களும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பறவைகளின் சொர்க்கம்

பறவை ஆர்வலர்களைச் சுண்டி இழுக்கும் இடமாக இத்தீவு திகழ்கிறது. இங்கு மொத்தம் 192 பறவை இனங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் 44 வகையான அரிய பறவை இனங்கள் இத்தீவிலேயே தங்கி தங்களது இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிராகன் ரத்த மரம்’

சொகோட்ரா தீவின் பிரதான அடையாளமாக விளங்குவது ‘டிராகனின் ரத்த மரம்’ (Dragon's Blood Tree) எனப்படும் வினோத மரமாகும். குடை போன்ற அமைப்பில் வளரும் இந்த மரங்கள், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையிலும், அதே சமயம் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் காட்சியளிக்கின்றன.

சுண்ணாம்புப் பாறை

இதுமட்டுமின்றி, இத்தீவில் உள்ள பிரம்மாண்ட சுண்ணாம்புப் பாறை மலைகள், மர்மங்கள் நிறைந்த இயற்கை குகைகள் மற்றும் கண்கவர் வெண் மணல் குன்றுகள் ஆகியவை சொகோட்ரா தீவை உலக வரைபடத்தில் தனித்துவமாகக் காட்டுகின்றன.

யுனெஸ்கோ அங்கீகாரம்

ஈடு இணையற்ற இந்த உயிரியல் வளத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் அங்கீகரித்த யுனெஸ்கோ அமைப்பு, கடந்த 2008-ம் ஆண்டு சொகோட்ரா தீவை ‘உலக இயற்கை பாரம்பரிய தளமாக’ அறிவித்துக் கௌரவித்தது.

சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - நயினார் நாகேந்திரன்
சென்னை,

சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது!

சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதற்காக இலங்கையைச் சேர்ந்த தமிழரான சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது மனதுக்கு நிம்மதியளிப்பதோடு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

சவுதி அரேபியாவில் வேலைக்காகச் சென்ற சக தமிழரான சிவராசா அனோஜன் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்த நாளில் இருந்தே அவரது பெற்றோரிடம் நேரடியாக உரையாடியதில் தொடங்கி, கருணையின் அடிப்படையில் சிவராசா அனோஜன் மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது வரை தொடர்ந்து நமது தமிழக பாஜக சார்பாக நாம் எடுத்த பல முயற்சிகள் வீண் போகவில்லை என்று நினைக்கையில் மனம் நெகிழ்ச்சியடைகிறது.

இந்த இனிய தருணத்தில், மனிதாபிமான அடிப்படையிலும் ஒரு இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மரண தண்டனையை ரத்து செய்த சவுதி அரேபியா உச்சநீதிமன்றத்திற்கு தமிழர்களின் சார்பாக எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கதிர்காமம் முருகப் பெருமான் அருளால் சிவராசா அலோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள இச்செய்தி தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம்: ஈரான் திட்டத்திற்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி:

ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும்  இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாக நடைபெற்று வந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் ஜலசந்தியைக் கடந்து செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்து வருவதுடன், அதற்கான கட்டணங்களையும் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சர்வதேச கடல் வழித்தடங்களில் சட்டவிரோத கட்டணங்கள், பாரபட்சமான கட்டுப்பாடுகள் மற்றும் முன் அனுமதி பெற வேண்டிய நிபந்தனைகள் விதிக்கப்படுவதை எதிர்ப்பதாக ஐரோப்பிய யூனியன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை 60 நாடுகள் ஆதரித்து உள்ளன. . கடல் வழிப் போக்குவரத்து தொடர்பான ஐ.நா. கடல் சட்ட விதிகளுக்கு இணங்க, கப்பல்கள் தடையின்றி பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் வழித்தடங்களில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் 27 மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 33 நாடுகள் என மொத்தம் 60 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கப்பல் போக்குவரத்து பாதிப்பு

போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சுமார் 125 பெரிய வணிகக் கப்பல்கள் கடந்து சென்றன. ஆனால், தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரெயில் பாம்புகோவில் சந்தையில் நிற்கும்: தெற்கு ரெயில்வே
சென்னை,

தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் பாம்புகோவில் சந்தையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை; சிறப்பு ரெயில்

ஆயுதபூஜையையொட்டி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06089) அக்டோபர் 19-ந் தேதியும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (06090) அக்டோபர் 20-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் கூடுதலாக பாம்புகோவில் சந்தை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பாம்புகோவில் சந்தையில் நிறுத்தம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் போது, பகல் 10.56 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும்போது மாலை 3.44 மணிக்கும் இந்த சிறப்பு ரெயில் பாம்புகோவில் சந்தையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?
சென்னை,

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது..

வழக்கமாகத் தமிழ்நாடு பாடத்திட்டப் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்தான் தொடங்குகின்றன. ஆனால், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்குகின்றன. இதனால், நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணை இன்னும் வெளியாகாதது மாணவர்களிடையே ஒருவித தயக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ வட்டாரங்களின் தகவல்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களைப் பள்ளிகள் சரிபார்த்து சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்வதற்கு அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இறுதி நாளுக்குள்ளாகவோ அல்லது அதையொட்டிய நாட்களிலோ தேர்வு அட்டவணை வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான மற்றும் தேவையற்ற தகவல்களை நம்பி மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும், சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான [cbse.gov.in](https://www.cbse.gov.in) என்ற தளத்தை மட்டும் அவ்வப்போது பார்வையிடுமாறும் ஆசிரியர்களும் கல்வி நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

4-வது டி20 : ஷாய் ஹோப் அதிரடி சதம்... இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
ஐதராபாத்,

4-வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டாஸ்

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஷாய் ஹோப் அதிரடி

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

மற்றொரு வீரர் ரூதர்போர்டு 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும், ஷிம்ரன் ஹெட்மையர் 12 பந்துகளில் 33 ரன்களும், ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

248 ரன்கள்

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 248 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.

3 வயது குழந்தை கடத்தல்: குற்றவாளியை 7 மணி நேரத்தில் பிடித்த போலீசார்...
கள்ளக்குறிச்சி,

குழந்தையை கடத்திய நபரை 7 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கடை நடத்தி வரும் தம்பதியின் மகன் ரேதுசன். இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து குழந்தையின் பெற்றோர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது லாரி ஒன்று வந்த பின்னரே குழந்தை மாயமானது தெரியவந்தது. பின்னர், லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேப்பூர் அருகே லாரியிடம் லிப்ட் கேட்டு மணிகண்டன் என்ற நபர் ஏறியுள்ளார். பின்னர், சின்னசேலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் டீக்குடிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார்.

கைது

அப்போது மணிகண்டன் போன் செய்து விட்டு தருவதாக கூறி ஓட்டுநரின் மொபைலை வாங்கி மாயமாகியுள்ளார். பின்னர், ஓட்டுநர் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தூங்கினார். இதனையடுத்து ஓட்டுநரின் மொபைலை போலீசார் டிராக் செய்தனர். அப்போது சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மொபைலின் லொகேஷன் காட்டியுள்ளது.

பின்னர், இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு, ஓசூர் செல்லும் பேருந்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த மணிகண்டனை நேற்று இரவு 11.30 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை எதற்காக கடத்தினார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி இந்திய கள்ள நோட்டுகள் வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை,

போலி இந்திய கள்ள நோட்டுகள் வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ரகசிய தகவல்

15.07.2026 அன்று, ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை D-1 D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் சிறப்புக் குழுவினர். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டு. ரூ.22,21,300/- மதிப்பிலான போலி இந்திய கள்ள நோட்டுகள் (FICN), வெளிநாட்டு பணம் மற்றும் கைப்பேசிகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்ற எண் 218/2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை

தொடர்ந்து, 16.07.2026 அன்று மற்றொரு குற்றவாளியிடமிருந்து ரூ.7,500/- மதிப்பிலான போலி இந்திய கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தன்மையை கருத்தில் கொண்டு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில். 20.07.2026 அன்று இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு (CB-CID) மாற்றப்பட்டது. பின்னர், இவ்வழக்கு CBCID CCW குற்ற எண் 1/2026 என மறுபதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகள் கைது

சிபிசிஐடி விசாரணையில், குற்றவாளிகள் மேற்கொண்ட மலேசியாவிலிருந்து போலி இந்திய கள்ள நோட்டுகளை பெற்று, அவற்றை இந்தியாவிற்குள் கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக, பின்வரும் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

1. ரவிச்சந்திரன் (41), ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

2. சபீக் ரஹ்மான் (37), அண்ணா சாலை, சென்னை.

3. சீனிவாசன் (48), கே.ஆர்.புரம், பெங்களூரு.

4. செய்யது அப்துல் ரஹ்மான் (39), ஆயிரம் விளக்கு, சென்னை.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணைபோது, 44 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வங்கி பரிவர்த்தனை பதிவுகள். பயண ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் கைப்பேசிகளிலிருந்து பெறப்பட்ட மின்னணு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள் நிபுணத்துவ ஆய்விற்காக மைசூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

13.10.2026 அன்று. சிபி-சிஐடி கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக. பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவுகள் 61(2), 179, 180 மற்றும் 238(b)-இன் கீழ், சென்னை எழும்பூரில் உள்ள  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (போலி பத்திரம் மற்றும் இந்திய கள்ள நோட்டுகள் வழக்குகள் விசாரணை நீதிமன்றம்) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்ற வலையமைப்பு

முதல் குற்றவாளி 16.07.2026 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் 90 நாட்களுக்குள். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-இன் பிரிவு 187(3)-ன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. உரிய சட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம். குற்றவாளிகள் சட்டரீதியான பிணையைக் தவிர்க்கப்படுகிறது. மேலும், விசாரணையை அனுமதிக்கிறது. கோருவதற்கான வாய்ப்பு தாமதமின்றி தொடங்க கள்ள நோட்டுக்களைக் கடத்துவதில் தொடர்புடைய விரிவான குற்ற வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் நாளை (15.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

அதன்படி தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B. காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, E.B. காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச். காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கி காலனி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.