குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை


குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை
x

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மீட்பு பணிக்காக தீயணைப்புத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, "மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. மக்கள் நீர்நிலைகளின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின் கம்பி அறுந்து கிடந்தால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கோ, தீயணைப்புத் துறைக்கோ, மின்வாரியத்துக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.


Next Story